1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (18:39 IST)

காங்கிரஸ் எம்.பி.க்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய “செவாலியே” விருது!

sasitharoor
காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன் கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது
 
23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராக பணியாற்றிய சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் 
 
தனக்கு செவாலியே விருது கிடைத்தது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சசிதரூர் பிரான்சு உடனான உறவை போற்றும் நம் மொழியை நேசிக்கும் கலாச்சாரத்தை போற்றும் ஒருவனாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் 
 
சசிதரூர் எம்பி ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது