1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (11:19 IST)

பாஜகவில் இணையும் தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள்..! ஜே.பி நட்டா முன்னிலையில் இணைகிறார்கள்..!!

jp natta
தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் டெல்லியில் ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
வட மாநிலங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் கால் பதிக்க பாஜக தீவிரம் காட்டி வருகின்றது. குறிப்பாக தமிழகத்தை குறி வைத்துள்ள பாஜக, மற்ற அரசியல் கட்சிகளில் உள்ள முன்னணி நிர்வாகிகளை தங்கள் கட்சியில் சேர்க்க மும்மரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில்  இணைய உள்ளனர்.

 
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் கு.வடிவேல், கந்தசாமி, சேலஞ்சர் துரை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். அதிமுகவை சேர்ந்த 14 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் பாஜகவில் இணையவுள்ளனர். இதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.