மலேசிய தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முன்னாள் பிரதமர்
மலேசியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மீண்டும் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பின் யாகோப். இவர் கடந்த ஆண்டு ஆகஸ் 21 ஆம் தேதி மலேசியாவின் பிரதமராக இருந்த யாசின்ற்கு பதிலாக மலேசியாவில் 9 வது பிரதமராக அந்நாட்டின் அரசர் சுல்தான் அப்துல்லாவால் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று மதியம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் இஸ்மாயில், மலேசியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.
வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் பொதுத்தேர்தல் வரவாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது. ஆனால், அப்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஆளும் கூட்டணியின் உட்கட்சியில் நிலவும் குழப்பத்திற்கு தீர்வு காணும் பொருட்டு இத்தேர்தல் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், 60 நாட்ககளுக்கும் நடக்கவுள்ள இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மீண்டும் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர், மலேசியாவின் லங்காவி தீவு தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும், அவர் சார்ந்த கூட்டணி கட்சியில் வேட்பாளர் யார் என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj