வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (19:29 IST)

கேரள முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

Oommen Chandy
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சான்டி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சான்டி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ்ட் கட்சியினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உம்மன் சாண்டியின் மகன் தன் ஃபேஸ்புக் தளத்தில்,  இதை உறுதிப்படுத்தியுள்ளதுடன்,  விரைவில் உடல நலம்பெற பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.