புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2025 (11:58 IST)

கேரட் அல்வாவில் கலக்கப்பட்ட கெட்டு போன பால்.. திருமண விழாவில் 150 பேர் மயக்கம்..!

Carrot Halwa
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில், விருந்தினர்களுக்கு கேரட் அல்வா பரிமாறப்பட்ட நிலையில், அதில் கெட்டுப்போன பால் இருந்ததால் 150 பேர் வரை வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பரிதாபூர் என்ற பகுதியில் இன்று காலை ஒரு திருமணம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்ட நிலையில், முதலில் கேரட் அல்வா வழங்கப்பட்டது. 
 
அந்த கேரட் அல்வாவை சாப்பிட்டவர்கள் திடீரென வாந்தி, மயக்கம் என உடல்நல பாதிக்குப்புக்கு உள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த திருமணத்தில் மொத்தம் 400 பேர் கலந்து கொண்ட நிலையில், விழாவில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது, கேரட் அல்வாவில் சேர்க்கப்பட்ட பால் கெட்டு போய் இருந்ததால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பால் சப்ளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran