1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (18:39 IST)

திருச்சி - குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்ன ஆனது?

Train
திருச்சி - குஜராத் இடையே இயக்கப்படும் ஹம்சஃபர்  விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சூரத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய ஹம்சஃபர்  விரைவு ரயிலில் சூரத்தில் இருந்து  25 கி.மீட்டர் தொலைவில் தீ விபத்து ஏற்பட்டது.
 
தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹம்சஃபர்  விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
திருச்சி - குஜராத்தின் ஸ்ரீகங்கா நகர் வரை ஹம்சஃபர் விரைவு ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Mahendran