வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (19:47 IST)

தையல் கடையில் தீ விபத்து...மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழப்பு

 Fire
தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர்.
 
மாராட்டிய  மாநிலம், சதர்பதி சம்பாஜி நகர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள டானா பாஜாரில் தையல் கடை செயல்பட்டு வந்தது.
 
இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து, இந்த தீ வேகமாகப் பரவியது. இவ்விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  7 பேர் புகையால் மூச்சுத்திணறி பலியாகினர்.
 
இவ்விபத்து பற்றித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து  பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.