சர்தார் வல்லபாய் படேல் சிலையை 30,000 கோடிக்கு விற்க முயற்சி: அதிர்ச்சித் தகவல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’ஒற்றுமையின் சின்னம்’ என்று கருதப்படும் சர்தார் வல்லபாய் சிலையைத் திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தில் திறக்கப்பட்ட இந்த சிலை இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சிலையை காண தினந்தோறும் இந்தியாவில் இருந்தும் வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருந்தனர் என்பதும் இதனால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆன்லைனில் மர்ம நபர் ஒருவர் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமையின் சிலையை ரூபாய் 30,000 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக விளம்பரம் ஒன்று செய்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்த குஜராத் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என்பது குறித்த விசாரணையை தொடங்கி விட்டதாகவும் மிக விரைவில் சர்தார் சிலையை விற்பனை செய்ய விளம்பரம் செய்த அந்த மர்ம நபர் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது