செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (09:49 IST)

கொரோனாவால் அதிகரித்திருக்கும் சுபசுர குடிநீர் – போலி மருந்துகள் விற்பனை அமோகம் !

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகும் வரும் வேளையில் சுபசுரக் குடிநீர் விற்பனை அதிகமாகியுள்ளதால் போலி மருந்துகள் விற்பனை அதிகமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகமாகியுள்ள வேளையில் சித்த மருத்துவர்கள் சுபசுரக் குடிநீர் குடிக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அதனை வாங்கி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சித்த மருந்துக் கடைகளில் இந்த மருந்தின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் சித்த மருந்து விற்பனைக் கடைகளில்,  சோதனை நடத்தியதில் 50க்கும் மேற்பட்ட போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.