திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (09:07 IST)

டெல்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் 2 வது நாளாக போராட்டம்..

delhi -farmers protes
லைநகர்  நோக்கிச் செல்லும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு வரும்  நிலையில், இரவிலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போராட்டத்தை கலைக்க போலிஸார் ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகிறது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், :எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளிய வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 
டெல்லியை  நோக்கி விவசாயிகள் முன்னேறிவரும் நிலையில், சில எல்லைகளில் கான்கிரீட், இரும்பு தடுப்புகளை ஒன்றுசேர்த்து, அகற்றி டெல்லியை   நோக்கிச் சென்றுகொண்டுள்ளனர்.
 
அதேபோல், அம்பாலா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி வரும்  நிலையில்,  முகக் கவசம் அணிந்தபடி, விவசாயிகள் டிராக்டரில் செல்கின்றனர்.
 
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் பிளாஸ்டிக் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், விவசாயிகள் போராட்டத்தின்போது, புகைக் குண்டுகாள் வீசியது, தடியடி உள்ளிட்ட போலீஸ் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகாள்  காயமடைந்துள்ளனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பற்றி விவசாயிகள் சங்கத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஸ்தம்பித்துள்ளது. 2 வது நாளாக விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்தைத் தொடர உறுதியெடுத்துள்ளனர்.
 
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்த பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.