வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (23:07 IST)

ரேசன் கார்டு மூலம் இலவச தானிய திட்டம் நீட்டிப்பு- மத்திய அரசு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் மக்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பரவில் ஆரபித்தபோது, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உணவு தானியங்கள் இலவசமாக விலையின்றி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  கடந்த செப்டம்பரில் நடந்த நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் ஏழை நலன் ரேசன் திட்டம், உணவு, பாதுகாப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டு, அடுத்தாண்டு 2023 வரை இலவச உணவு தானிய திட்டம் ரேசன் கடைகளில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கு ரேசனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும்.

இப்புதிய நீட்டிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திட்டம் அமலில் இருக்கும் எனவும்,  இத்திட்டத்தை செயல்படுத்த 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவிடும் எனவும் இதனால் 81 கோடி மக்கள் பயனடைவர் எனக் கூறப்பட்டுள்ளது.