ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 13 மே 2014 (17:47 IST)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நல்ல பொழுதுபோக்கு - ஒமர் அப்துல்லா

தேர்தலுக்குப் பிறகு வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளதாக ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில் பல கருத்துக்கணிப்புகள் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறின.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட ஒரு மாநிலத்திற்கான கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எப்படி இது சாத்தியமாகும். இந்தத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களிடம்தான் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தியதா என சந்தேகம் எழுந்துள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு இடங்களை பிடிக்கும் என ஒரு கருத்துக்கணிப்பும், 14 இடங்களை பிடிக்கும் என மற்றொரு கருத்துக்கணிப்பும் கூறியதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.