ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:52 IST)

பையா.. பானிபூரி குடு பையா..! ருசித்து சாப்பிட்ட யானை! – வைரலாகும் வீடியோ!

Elephant
அசாமில் யானை ஒன்று தெருக்கடையில் பானிபூரி வாங்கி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

காட்டு விலங்குகளிலேயே மனிதர்களிடம் விரைவில் பழகுபவையாக இருப்பவை யானைகள். ஆங்காங்கே சில சமயங்களில் மனிதர்கள் நடமாடும் பகுதிகளில் யானைகள் புகுந்து விடும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

அதேபோல பல பகுதிகளில் யானைகள் சிறுபிள்ளைத்தனமாய் செய்யும் சேட்டைகள் சிலவும் வீடியோவாக வைரலாகி வருகின்றன. அசாமில் அப்படியான ஒரு க்யூட் செயலை செய்துள்ளது குட்டியானை ஒன்று.


அசாம் மாநிலம் கவுஹாத்தி மாவட்டத்தில் உள்ள தெஸ்பூரில் சாலையோரமாக ஒருவர் பானிபூரி விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக பாகனுடன் வந்த குட்டி யானை ஒன்று பானிபூரி கேட்டு நின்றுள்ளது.

அந்த பானிபூரி விற்பவர் மனிதர்களுக்கு தருவது போலவே ஒவ்வொரு பூரியாக மசாலா நிரப்பி கொடுக்க அதை துதிக்கையால் வாங்கி வாய்க்குள் போட்டு ருசித்துள்ளது அந்த க்யூட் குட்டி யானை. இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Edited By: Prasanth.K