செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (14:40 IST)

எலெக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேக ஷோரூம்: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

எலக்ட்ரிக் கார்களுக்காகவே தனி ஷோரூம் திறக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக  எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் எலக்ட்ரிக்  கார் தயாரிப்பில் முன்னணியாக இருக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். இந்நிலையில் இந்த நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என்று பிரத்யேகமாக தனி ஷோரூம்களை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
முதற்கட்டமாக ஹரியானா மாநிலம் குர்கான் நகரில் இரண்டு எலக்ட்ரிக் கார் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து இந்த கார் ஷோரூம்கள் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பல எலக்ட்ரிக் கார்களின் ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran