ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:03 IST)

ஆப்பிள் ஷோரூம் திறப்பு விழாவில் ரஜினி மகள் உள்பட பிரபலங்கள்..!

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஷோரூம் இன்று மும்பையில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த விழாவில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் போனின் முதல் அதிகாரப்பூர்வ ஷோரூம் இன்று மும்பையில் திறக்கப்பட்டது. மேலும் வரும் 20ஆம் தேதி டெல்லியிலும் ஒரு ஷோ ரூம் திறக்கப்பட உள்ளது. 
 
இந்த நிலையில் ஆப்பின் நிறுவனத்தின் சிஇஓ டிம்குக் இன்று மும்பையில் உள்ள ஷோரூமை திறந்து வைத்தார். முன்னதாக நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், நடிகை ரவீனா டண்டன், நடிகை மாதுரி தீட்சித் உள்பட  பலர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இது குறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva