வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (12:26 IST)

மேற்கு வங்கத்தில் மீண்டும் தேர்தல் - பாஜகவின் சூழ்ச்சியா?

இந்திய மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட தேர்தல்களும் கடந்த 19ம் தேதியுடம் முடிந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மறுதேர்தல் மீண்டும் நாளை (22ம் தேதி) நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.
 
மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர் என்னும் தொகுதியில் நடைபெறும் இந்த மறு தேர்தலானது காலை 7 மணிக்கு துவங்கி 6 மணிவரை நடைபெறும். மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என பாஜக நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.