தமிழக தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

election
Last Updated: திங்கள், 20 மே 2019 (17:03 IST)
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்கியது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு நேற்று ( மே 19ஆம் தேதி ) அன்று முடிவுற்றது. வாக்குப்பதிவு முடிந்த மாலையிலேயே இந்திய ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன.
இதில் இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்றும், இதற கட்சிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
 
இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கையுடன் மொட்டை கடிதம் வந்ததாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்தக் கடிதம்குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு மொட்டை கடிதம் எழுதிய நபரைத் தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :