புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:08 IST)

கொரோனா வார்டில் மதுகுடித்த ரவுடி... வைரல் புகைப்படம்

ஜார்கண்ட்  மாநிலம் தன்பாத்தில் வசித்து வந்தவர் சாந்து குப்தா. இவர் மீதான குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனால்  இவருக்குக் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் மருத்துவமனை வார்டில் கைவிலங்குடன் மதுபாட்டில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து  உயரதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதும் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.