ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (12:44 IST)

’யாரும் நம்பிவிடாதிங்க’ – பொதுமக்களிடம் கெஞ்சும் மோடி

’யாரும் நம்பிவிடாதிங்க’ – பொதுமக்களிடம் கெஞ்சும் மோடி

”பா.ஜ.க.வின் ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்காதவர்கள் தலித்துக்கு எதிரானவர்களாக எங்களை சித்தரிக்க முயற்சி செய்து வருகின்றனர், அதை யாரும் நம்பாதீர்கள்” என்று மோடி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


 


இது குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது, “தலித்துகள் தாக்கப்படுவது எல்லா கால கட்டங்களிலும் நடந்து வந்த ஒன்றே. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றவுடன் மட்டுமே தலித்துகள் மீது தாக்குதல் நடத்துவதாக சித்தரிப்பது, தலித்துகளுக்கு எதிரானவர்களாக எங்களை சித்தரிக்கும் முயற்சியாகும். அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

பா.ஜ.க.வை, 80 சதவீதத்திற்கும் மேலான எஸ்.சி,எஸ்.டி மற்றும் ஓபிசி தொண்டர்கள் தான் முக்கிய தூண்களாக இருந்து வளர்த்து வருகின்றனர். பா.ஜ.க.வின் நிலைமை இப்படி இருக்க, வீண் கலங்கம் ஏற்படுத்துவதற்காகவே எதிர்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் வளர்ச்சி என்ற நோக்கிலேயே எங்கள் பயணம் தொடர்கிறது.” என்றார்.