நாடு முழுவதும் ஊரடங்கு வேண்டும் - மருத்துவர்கள் கோரிக்கை!
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து அதிவேகமாக பரவும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவத்துறை திணறியுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் பெரும் போராட்டத்தில் உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.