திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (15:31 IST)

அதானி விவகாரத்தில் திமுக அரசுக்கும் பங்கு உண்டு: பாஜக பதிலடி..!

அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு சுமத்திய நிலையில் காங்கிரஸ் கட்சி ஆவேசமாக அதானியை காப்பாற்றுவதாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளுக்கும்  பங்கு உண்டு என பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய போது ’சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்கள் 12 ஜிகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தமானது. மின் விநியோக நிறுவனங்களுடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

ஆனால் அதிக விலை என்ற காரணத்தை காட்டி மின்சாரத்தை வாங்க சில  மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஓடிஸா, திமுக ஆட்சி செய்யும் தமிழகம், காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர், முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த ஆந்திர பிரதேச ஆகிய மாநிலங்களில் 265 மில்லியன் அமெரிக்க டாலரை அதானி மற்றும் அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த முறைகேடுகளை காங்கிரஸ் மற்றும் திமுக ஒப்புக்கொள்ள தயாராக என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran