ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (14:46 IST)

6 மாநிலங்களின் உள்துறை செயலாளர் பணி நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம்

election commision
குஜராத், உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி நீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி நீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் DGP-ஐ பணி நீக்க்ம செய்தும் இந்திய தேர்தல் ஆணையம்  அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.