சிறை உணவை மறுக்கும் தினகரன் திகாரில் என்ன செய்கிறார்!
சிறை உணவை மறுக்கும் தினகரன் திகாரில் என்ன செய்கிறார்!
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுகேஷ் வாக்குமூலத்தை அடுத்து தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திகார் சிறையில் மொத்தம் 9 பிளக்குகள் உள்ளது அதில் 7-வது பிளக்கில் தான் தினகரன் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பிளாக்கில் 300-க்கும் குறைவான கைதிகள் உள்ளனர். அதில் விசாரணை கைதிகளே அதிகம் என்கிறார்கள்.
தினகரன் முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் பாதுகாப்பான கைதிகள் இருக்கும் அறைக்கு அருகில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வருமான வரி கட்டும் நபர் என்பதால் உயர் வகுப்பான 'ஜி ' பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தினமும் நன்றாக தூங்கும் தினகரன் சிறையில் கொடுக்கப்படும் உணவை சாப்பிட மறுப்பதாகவும் பழம், பிஸ்கட், திராட்சை, பயறு வகைகளை உண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சில நேரங்களில் மதியம் மற்று இரவில் சப்பாத்தி, ரொட்டிகளை சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
பேச்சு துணைக்கு நண்பர் மல்லிகார்ஜூனாவையும் ஒரே அறையில் தங்கவைக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. தன்னை தற்போது ஜாமீனில் எடுக்க வேண்டாம் என தினகரன் கூறியதாகவும், தற்போதைய சூழலில் இந்த அமைதி தனக்கு வேண்டும் என தினகரன் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. சிறையில் நண்பர் ஒருவர் கொடுத்த சில அரசியல் புத்தகங்களை தினகரன் படித்து பொழுதை கழிப்பதாக கூறப்படுகிறது.