சனாதன எதிர்ப்பு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம்
சனாதன தர்மத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில் அதில் அமைச்சர் உதயநிதி பேசிய போது சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறினார். அது பெரும் சர்ச்சையான நிலையில் அவரது தலைக்கு 10 கோடி விலை நிர்ணயித்து ஒரு சாமியார் அறிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி திமுக, சமாஜ்வாதி தலைவர்களுக்கு எதிராகவும் டெல்லியில் சாமியார்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சனாதன எதிர்ப்பு விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக மட்டுமின்றி சமாஜ்வாதி கட்சிக்கு எதிராகவும் டெல்லியில் சாமியார்கள் போராட்டம் நடத்தி வருவது அக்கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran