செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 மே 2022 (22:17 IST)

சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது: ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார்

arrested
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஹவாலா தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்
 
கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்கும் கடனை திருப்பி செலுத்தவும் இந்த தொகை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உள்ள சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன