வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (13:47 IST)

டெல்லியில் கடும் காற்று மாசுபாடு – பள்ளிகளை மூட உத்தரவு!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு மோசமாகி வரும் நிலையில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் டெல்லியில் காற்று மாசுபாடால் ஊரே புகைமண்டலமாக காட்சி தருவது தொடர்கிறது.

இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது. சில வாரங்கள் முன்னதாக பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.