டெல்லியில் பெண் படுகொலை: அஃப்தாப்பின் போலீஸ் காவல் நீட்டிப்பு
டெல்லி யூனியனில், லிவ் இன் முறையில் வாழ்ந்த வந்த காதலி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவரை 35 துண்டுகளாக வெட்டிய காதலனை போலீஸார் கைது செய்திருந்த நிலையில் அவரது போலீஸ் காவல் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அஃப்தாப் மற்றும் ஷ்ரத்தா இருவரும் டெல்லிக்குக் குடியேறி அங்கு லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், ஷ்ரத்தா அவரைத் திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தவே, இருவருக்கும் இடையே பிரச்சனை ஆகியுள்ளது.
எனவே, கடந்த மே 18 ஆம் தேதி அஃப்தப், ஷ்ரத்தாவை கொலை செய்து, அவது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து, டெல்லியில் ஒவ்வொரு பகுதியில் வீசியதாக அவர் வாக்கு மூலம் அளித்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்து , உண்மை கண்டறியும் சோதனை முடிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்த, நிலையில், அஃப்தாப்பிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸ் காவலை மேலும், 5 நட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Edited by Sinoj