10 கிலோ கத்தி ரோல்; 20 நிமிஷத்துல சாப்புடணும்! - பந்தயத்துக்கு படையெடுக்கும் உணவு பிரியர்கள்!
டெல்லியில் உள்ள பிரபலமான சாலையோர உணவகம் ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ள உணவு போட்டி வைரலாகியுள்ளது.
நாட்டில் பல்வேறு வகையான பொழுதுபோக்குகள் அல்லது பழக்க வழக்கங்களை மக்கள் கொண்டுள்ள நிலையில் Foodies எனப்படும் உணவுப்பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது. பல்வேறு உணவகங்களுக்கும் செல்லும் இந்த உணவு பிரியர்கள் அங்கு டஜன் கணக்கில் சாப்பிடுவதும் வீடியோ போடுவதுமாக இருந்து வருகிறார்கள்.
இதுபோன்ற உணவு பிரியர்களுக்கு பல உணவகங்கள் போட்டி நடத்தி பரிசளிப்பதும் உண்டு. அந்த வகையில் டெல்லியில் உள்ள சாலையோர உணவகம் ஒன்று உணவு பிரியர்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 30 முட்டை மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றை கொண்டு 10 கிலோ எடைக்கு கத்தி ரோல் என்ற உணவு செய்யப்பட்டுள்ளது. இதை 20 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.