முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனாவா? – தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகியவற்றில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உணவகங்கள் திறக்கப்பட்டன. டெல்லி மருத்துவமனைகளில் டெல்லியை சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்குமாறு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் இறுமலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவை கொரோனாவுக்கான அறிகுறிகள் என்பதால் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.