கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் அடுத்த டெல்லி முதல்வர் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. அந்த கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தான் தேவை என்பதால், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த பர்வேஸ் முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில், முதல்வர் பதவிக்கான போட்டியில் கைலாஷ் கெலாட் மற்றும் பர்வேஸ் இருவரும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஒரிரு நாளில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran