1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2025 (08:44 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

டெல்லி சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இன்று காலை 8:00 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், தற்போது முன்னணி நிலவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 70 தொகுதிகளில், தற்போது 58 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
பாஜக 32 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சி 25 தொகுதிகளில் முன்னிலை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது அணியாக நின்ற காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
டெல்லியை பொருத்தவரை, ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை. இந்த நிலையில், தற்போது பாஜக 32 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதால், அக்கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் பின்னடைவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் முழு தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதன்பிறகே டெல்லியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும்.
 
Edited by Mahendran