ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (13:45 IST)

ஐ.நா.சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை முதல்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடப்பட்டது. ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


 

 
ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் சையத் அக்பரூதீன் இச்செய்தியை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். இதுவே ஐக்கிய நாடுகள் சபையில் தீபாவளி கொண்டாடப்படுவது முதல்முறை.
 
ஐ.நா.சபை தலைமையகம் கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து வண்ண விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது அலங்காரம் நாளை வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஐ.நா. உறுப்பு நாடுகளில், பெரும்பாலான நாடுகளில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என குறிப்பிட்டு, தீபாவளி நாளில் ஐ.நா. சபை கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என்று தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மற்றும் கூட்டம் நடைபெறாத நாளாக அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.