புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:41 IST)

விருப்பப்பட்டு உறவு கொண்டால் பாலியல் வன்புணர்வில் வராது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாலியல் வழக்கு ஒன்றில் விருப்பப்பட்டு உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்புணர்வில் வராது என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாலியல் வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது. விற்பனை வரித்துறையின் உதவி ஆணையராக  இருக்கும் பெண் ஒருவர் சி ஆர் பி எஃப் அதிகாரி மீது பாலியல் புகார் ஒன்றை சுமத்தினார். அதில் இருவரும் ஆறு ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியதாகவும் அதனால் பல முறை உடலுறவுக் கொண்டதாகவும், ஆனால் இப்போது அந்த ஆணுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகவும் அதனால் அவருக்குப் பாலியல் வன்புணர்வு பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டி.ஒய். சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு ,’ திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது’ எனக் கூறியுள்ளனர். மேலும் திருமணத்துக்கு முன்னர் விருப்பப்பட்டு பாலியல் உறவுக் கொள்வதை பாலியல் வன்புணர்வாகக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.