வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (21:33 IST)

கொரோனா தடுப்பூசி விலை ரூ. 200 மட்டுமே: சீரம் நிறுவனம் அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
 
விரைவில் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் மத்திய அரசுக்கு இந்த தடுப்பூசியை ரூபாய் 200க்கு சலுகை விலையில் தர சீரம் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது 
 
ஒரு குப்பி குரல் தடுப்பூசி ரூபாய் 200 என சலுகை விலையில் மத்திய அரசுக்கு தர சீரம் நிறுவனம் வழங்குவதாக சற்றுமுன் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இந்த தடுப்பூசியை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே ஒரு குப்பி தடுப்பூசியின் விலை ரூபாய் 200 ஆக இருந்தாலும் பொதுமக்களுக்கு அது இலவசமாகவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது