வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 மே 2022 (15:39 IST)

5 முதல் 12 வயது சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி! – முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் 5 முதல் 12 வயதிற்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 5 முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மே 4-ம் தேதி ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தகவல் தெரிவித்துள்ளது. அதற்குபின் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.