திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 மே 2022 (10:49 IST)

எத்தன நாள் மத்தவங்களுக்கு ஐடியா சொல்றது? – தனிக்கட்சி தொடங்கும் பிரசாந்த் கிஷோர்!

இந்தியாவின் பிரபல அரசியல் வியூகியான பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் பல நடந்து வரும் நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவராக கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். முன்னதாக கடந்த 2016ல் நடந்த பாராளுமன்ற தேர்தல், ஆந்திர சட்டசபை தேர்தல், சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து சோனியா காந்தியை சந்தித்து பேசி வந்தார்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சியில் தான் சேரவில்லை என யூகங்களை மறுத்தார். இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.