நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடி வரும் நிலையில் இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்து கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!
நமது கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை #ChildrensDay வாழ்த்து தெரிவிப்போம்!
நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!
Edited by Mahendran