மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி என்று பல ஆண்டுகளாக போற்றப்பட்டு வரும் நிலையில், மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை என்றும் இந்தியாவுக்கு அல்ல என்றும் பிரபல இந்தி பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகராக இருந்தவர் அபிஷேக் பட்டாச்சார்யா. இவர் ஹிந்தி மட்டுமின்றி பெங்காலி உள்பட சில மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். என்பதும், இவர் பிரபல இசையமைப்பாளர் ஆர் டி பர்மன் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷா போன்ஸ்லே உள்பட பல முன்னணி பாடகர்களுடன் இவர் இணைந்து பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அபிஜித் அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியை விட மேலானவர் ஆர் டி பர்மன் என்றும், மகாத்மா காந்தியை எப்படி தேசத்தந்தை என்று அழைக்கிறோமோ, அதே போல் இசை உலகின் தேசத்தந்தை ஆர் டி பர்மன் என்றும் கூறினார்.
அது மட்டுமின்றி, மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை என்றும், இந்தியாவுக்கு அல்ல என்றும் கூறினார். இந்தியாவில் இருந்து தான் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. காந்தி இந்தியாவின் தேசத்தந்தை என்று தவறாக அழைக்கப்பட்டு வருகிறார். பாகிஸ்தான் நாடு இருப்பதற்கு காரணமானவர் அவர் என்பதால், அவர் பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran