வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:04 IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்கள் சற்று முன் காலமான நிலையில் அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆஸ்கர் பெர்னாண்டஸ் சற்றுமுன் காலமானார் அவருக்கு வயது 80
 
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்பதும் அவருடைய அவர் மிகச் சிறந்த முறையில் தனது துறையை நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் சற்று முன்னர் காலமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது