செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (18:42 IST)

நாளை வாக்கு எண்ணிக்கை.. இன்று அவசர கூட்டத்தை கூட்டிய மல்லிகார்ஜுன கார்கே!

கர்நாடக மாநிலத்தில் கடந்த பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
 
இந்த நிலையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே இல்லத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
 
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் உயர்மற்ற குழு அவசர ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான ஊடகங்கள் காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருப்பதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran