ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (10:53 IST)

காங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி அபராதம் செலுத்த உத்தரவு

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிமீறலில் ஈடுபட்டதுக்காக ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளதாக  கூறப்படுகிறது.


 
குஜராத்தில் அடுத்த வாரம் ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது. 
 
இதில் வெற்றி பெறுவதுககாக 42 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூர் பிடதியில் உள்ள ஈகிள்ட்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஈகிள்ட்டன் விடுதி மீது பாஜக தலைமை கடும் கோபத்தில் உள்ளது. இதற்கிடையே அந்த விடுதி 77ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்தற்காக ரூ.982 கோடி அரசுக்குத் தண்டம் செலுத்த வேண்டியுள்ளதாக ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.
 
77 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு  982 கோடியாகும். இந்த தொகையை செலுத்திவிட்டு நிலத்தை வைத்துக்கொள்ளலாம்  அல்லது கட்டணத்தை செலுத்தாவிட்டால் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
 
முன்னதாக ஆட்சி செய்த பாஜக அரசு இந்த நிலத்தை ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைப்பது என கடந்த 2012ம் ஆண்டு முடிவெடுத்தது.
 
இதற்காக கட்டணமாக 82.69 கோடி ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.