1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 மார்ச் 2018 (09:19 IST)

டெபாசிட் காலி எதிரொலி: காங்கிரஸ் எடுக்கும் அதிரடி முடிவு

சமீபத்தில் நடைபெற்ற உபி மற்றும் பீகார் மாநில மக்களவை இடைத்தேர்தலில் பாஜக மூன்று தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் டெபாசிட் இழந்துள்ளது. எனவே காங்கிரஸ் தலைமையிலான அணி, பாஜகவை வீழ்த்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் திரிபுரா உள்பட மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி, மக்களவை இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து காங்கிரஸ் இனிமேல் தனித்து போட்டியிடும் முடிவை கைவிட்டுள்ளதாக தெரிகிறது. உபியின் இரண்டு தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றி பெற முக்கிய காரணம் மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்ததுதான். எனவே காங்கிரஸ் கட்சியும் இனிமேல் கூட்டணி முடிவை மேற்கொள்ளவிருக்கின்றதாம்

இதுகுறித்து உபி மாநில காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியபோது, 'உ.பி. காங்கிரஸுக்கு ராஜ்பப்பர் புதிய உத்வேகம் அளிப்பார் என 2016-ல் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கட்சிக்கு அதிக பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இவரை மாற்றுவது மட்டுமின்றி இனிமேல் கூட்டணி வைத்து போட்டியிட்டால் வரும் மக்களவை தேர்தலில் சில தொகுதிகளாவது கிடைக்கும்” என்று கூறினார் மேலும் உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் மீது அதிருப்தி அதிகரித்திருப்பதால் அவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.