ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (22:22 IST)

விக்ரம் வீட்டில் இருந்து சினிமாவில் அறிமுகமாகும் இன்னொரு நடிகர்

விக்ரம் வீட்டில் இருந்து இன்னொரு வாரிசு நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
 
‘சேது’ படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிகர் என தன்னை நிரூபித்தவர் விக்ரம். அதன்பிறகு இப்போதுவரை ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய மகனான த்ருவ் விக்ரமும் ஹீரோவாக அறிமுகமாகிறார். பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் த்ருவ் விக்ரம்.
 
இந்நிலையில், விக்ரமின் அக்கா மகனான அர்ஜுமனும் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இதற்காக பயிற்சியெல்லாம் எடுத்து தன்னைத் தயார்செய்து கொண்டுள்ள அர்ஜுமன், பெயரிடப்படாத ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.