வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (15:41 IST)

தேர்தலில் படுதோல்வி - தேசிய அந்தஸ்தை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் !

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேசிய அந்தஸ்தை இழந்துள்ளன.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெறாமலேயே பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது . இந்த தேர்தலில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது
.
இந்நிலையில் மொத்தமாக 5 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமேக் கொண்டுள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேசியக் கட்சி எனும் அந்தஸ்தை இழந்துள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகள் மிகக்குறைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது இதுதான் முதல்முறை.

ஒருக் கட்சி தேசியக் கட்சியாக அந்தஸ்து பெறுவதற்கு பாராளுமன்ற தேர்தலில்  குறைந்தது 11 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும், நான்கு மாநிலங்களில் இருந்து குறைந்தது 4 இடங்களை கைப்பற்றுவதுடன் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். மேலும் நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் அதாவது 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை நிறைவேற்றத் தவறியுள்ளன.