செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (07:14 IST)

தினசரி 3 மணி நேரம் மின்வெட்டு: அதிகாரபூர்வமாக அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி!

தினசரி 3 மணி நேரம் மின்வெட்டு என அதிகாரபூர்வமாக அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்கள் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்றும் எந்த மாநிலத்திலும் மின் தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தாலும் பல மாநிலங்கள் தங்களுடைய நிலக்கரி இருப்பு பற்றாக்குறை காரணமாக மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியது
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தினசரி 3 மணி நேரம் மின்வெட்டு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
பஞ்சாப் மாநிலத்தை அடுத்து தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
.