1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

திருப்பதி ஏழுமலையான சேனலில் சினிமா பாட்டுக்கள்: அதிர்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள்

ttd
திருப்பதி ஏழுமலையான சேனலில் சினிமா பாட்டுக்கள்: அதிர்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தொலைக்காட்சி ஒன்று இயங்கி வருகிறது என்பதும் இந்த சேனலில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள் மற்றும் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகும் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று திடீரென திருமலை திருப்பதி தேவஸ்தான சேனலில் சினிமா பாட்டுகள் ஒளிபரப்பியதாக தெரிகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இதுகுறித்துதகவலறிந்த தேவஸ்தான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தவறை சரி செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
திருப்பதி தேவஸ்தான சேனலில் திடீரென சினிமா பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது