முட்ட போட்டு வைரலான கோழி!
கேரள கிராமத்தில் உள்ள கோழி ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட bv-380 ரக கோழிகளை வாங்கி வளர்த்தியுள்ளார். அதில் சின்னு என பெயரிடப்பட்டுள்ள ஒரு கோழி காலை சுமார் 8.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை 24 முட்டைகளை போட்டுள்ளது.
கோழி வளர்ப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஒரு அரிய சாதனை என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த பலரும் சின்னு கோழியை காண குவிந்துள்ளனர். மேலும் அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.