புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (12:12 IST)

மலேரியாவை முற்றிலும் ஒழித்த சீனா… உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மலேரியா பாதிப்பு கூட ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

உலகை ஆட்டிப்படைத்த நோய்களில் மலேரியாவும் ஒன்று. சீனா இந்த நோய்க்கு எதிரான தன்னுடைய போரை 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. 70 ஆண்டுகால போராட்டத்துக்கு பின்னர் இப்போது சீனா முற்றிலுமாக மலேரியாவை ஒழித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கு எந்தவொரு புதிய மலேரியா பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம் ‘மலேரியாவை வென்ற சீன மக்களுக்கு வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளது.