1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (12:49 IST)

5 வயது குழந்தை கோமா நிலையில்: மருத்துவரின் தவறான சிகிச்சை தான் காரணமா?

பெங்களூரில் 5 வயது குழந்தை ஒன்று கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. மருத்துவர்களின் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பெங்களூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரது 5 வயது மகன் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கையில் காயம் இருந்தாலும் குழந்தை அப்பொழுது ஆரோக்கியமாகவே இருந்துள்ளான்.
 
இந்நிலையில் குழந்தைக்கு 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவே 60 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் குழந்தை கோமா நிலைக்கு சென்றுள்ளான்.
 
குழந்தைக்கு இருதய பிரச்சனை இருந்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க மருத்து குழந்தையின் தந்தை அறுவை சிகிச்சைக்கு முன்னர் வரை குழந்தை நல்ல ஆரோக்கியமாகவே இருந்தான். இதற்கு காரணம் மருத்துவர்களிம் அலட்சியமே என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
குழந்தை கோமா நிலைக்கு சென்று 9 நாள் ஆகியும் மருத்துவமனை தரப்பில் இருந்து குழந்தையின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என குழந்தையின் தந்தை புருஷோத்தமன் கூறியுள்ளார்.