வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:33 IST)

டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு.!!

MK Stalin
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
 
அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
 
இதனைத் தொடர்ந்து, சென்னை திரும்பிய அவர், தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்து இருப்பது மற்றும் 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்க மறுப்பது ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.  
 
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வி தொடர்பான நிதி மற்றும் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளார். 

 
இதேபோல, மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு விவகாரம், ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் மனு அளிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.